Browsing Category
பயிற்சிகள்
8 posts
பயிற்சிகள்
சூஃபித்துவத்தின் இலட்சியம், மனிதனுக்குள் சில உயர் குணப் பண்புகளை வளர்ந்தோங்கச் செய்வதாகும். அவை, சுய பரிசுத்தம், இதயப் பரிசுத்தம், அறநெறிப் பண்பாடுகள், செயல்களில் அழகிய நடைமுறைகளைக் கடைப்பிடித்தல்(இஹ்சான்), இறை நெருக்கம், உள்ளார்ந்த ஞானம்(மஃரிஃபா), சுயத்தின் அழிவு(ஃபனா), நிரந்தர இருப்பு(பகா) ஆகியனவாகும். சுருங்கக் கூறுமிடத்து, சூஃபித்துவத்தின் உண்மையான நோக்கம் யாதெனில், தேட்டவானுக்கு ஆன்மீகப் பயிற்சியளிப்பதின் மூலம், அவனை…
உணர்வூட்டும் அகமிய நுட்ப மையங்கள்
பொதுவாக, மனித உடலுக்குள், மனம் அல்லது மூளை எனப்படும் ஒரே ஒரு ‘உணர்வூட்டும் நுட்ப மையம்’ இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், மூத்த சூஃபிகள், தங்களின் அனுபவங்கள் மூலம் மேலும் ‘பல உணர்வு மையங்கள்’ அல்லது ‘அகமியப்புலன்கள்’ இருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றை ‘லதாயிஃப்’ (ஒருமையில் லதீஃபா) என்று குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் தங்களின் ஆழ்ந்த உள்ளுணர்வின் அடிப்படையில்,…
எங்கே மற்றவர்களுடைய முடிவு உள்ளதோ, அங்கேதான் நம் துவக்கம் உள்ளது
“இந்திராஜுன் நிஹாயத் ஃபில் பிதாயத்” பொருள்-“எங்கே மற்றவர்களுடைய முடிவு உள்ளதோ, அங்கேதான் நம் தொடக்கம் உள்ளது” என்பது நக்ஷ்பந்தி முஜத்திதி தொடரின் தனித்துவமிக்க வரிசைமுறையைக் கொண்ட ஆன்மீகப் பயிற்சிகளை விவரித்துச் சொல்லப் பயன்படுத்தப்படுகிறது. இறைநெருக்கம் பெறுவதில், மனிதர்கள் எதிர்கொள்ளும் தடைகளை வெல்வதற்கு உதவியாக வடிவமைக்கப்பட்ட, சிறப்பான இப்பயிற்சி உத்தியை 14 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்த…
உள்ளார்ந்த அருள் நோக்கு (தவஜ்ஜுஹ்)
நபிகளாருக்கு முதன் முறையாக வேதவெளிப்பாட்டை வழங்க வந்த நேரத்தில், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூன்று முறை ஆரத்தழுவி ஆலிங்கனம் செய்த நிகழ்ச்சியை, பெரும்பாலான அறிஞர்கள், ‘தவஜ்ஜுஹ்’ எனப்படும் உள்ளார்ந்த அருள் நோக்கின் (Spiritual Transmission) ஒரு வடிவம் எனக் கருதுகின்றனர். இந்நிகழ்வின் மூலம், இறைவனின் புறத்திலிருந்து ஜிப்ரீல்(அலை) அவர்களால் கொண்டுவரப்பட்ட அறிவுஞானத்தின் தொடக்கமே தவஜ்ஜுஹ்தான் எனும்…
அகமிய பந்தம் (நிஸ்பத்)
நிஸ்பத் எனும் அரபிச்சொல்லின் பொருள், இருவரிடையே உள்ள உறவு அல்லது இணைப்பு என்பதாகும். சூஃபிகளின் சொல்லகராதியில் அது இறைவனுக்கும், மனிதர்களுக்குமிடயே உள்ள பந்தத்தைக் குறிக்கிறது. சூஃபித்துவத்தின் சாராம்சம் என்னவெனில், ஒருவர், ஒரு சில நல்லொழுக்கப் பண்புகளை அல்லது சிறப்பம்சத்தை தன்னுள்ளே எந்த அளவு வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், அச்சிறப்பம்சமே அவனை முற்றிலும் வியாபித்த நிலையில் அவனை முழுவதுமாக…
ஆழ்நிலை தியானம் (முராகபா)
‘ஆழ்நிலை தியானம்’ அல்லது ‘முராகபா’ எனும் பயிற்சியே, அனைத்து ஆன்மீக நிலைகளும் பூரணத்துவமடைய வழிவகுக்குகிறது என்பது பல நூற்றாண்டு கால அனுபவங்கள் மூலம் தெரிய வருவதாகும். அதன் காரணமாகத்தான், நமது ஞானத்தொடரின் ஆசான்கள் திக்ரையும் (இறைவனை நினைவுகூர்ந்து அழைத்தல்), ஸலவாத்தையும் (நபிகளார் மீது அருள்புரிய வேண்டுதல்) இன்னபிற உச்சாடன உத்திகளைச் செய்தபோதும், அவர்களின் அகமியப் பயிற்சியின்…
இறைவனை நினைவுகூர்தல் (திக்ர்)
சூஃபி ஆசான்கள் திக்ரெனும் இறைவனை நினைவு கூர்தலை வலியுறுத்துவதின் நோக்கம், அது ஆர்வலரின் கவனத்தை இறைவனின் பக்கமாக முன்னோக்கச் செய்து, அவனைப்பற்றிய நம்பிக்கை, அறிவு மற்றும் விசுவாசத்திற்கு அடிப்படை வித்திடுகிறது என்பதாலாகும். ‘இறைவனது முன்னிலை’ பற்றிய தொடர்ச்சியான விழிப்புணர்வு உண்டாகும் விதம், அவனை எவ்வளவு அடிக்கடி நினைவு கூறமுடியுமோ அவ்வளவு நினைவு கூறவேண்டுமென்பது இறைவனின் அடிப்படையான…
இப்பாதையின் மீதான மெய்யறிவு
இவ்வான்மீகப் பாதையில் பயணித்தவர்களால் கண்டறியப்பட்ட ஆய்வுகள் யாவும் கொள்கைக் கோட்பாடுகளாக இல்லாமல், முற்றிலும் செயல்வடிவமாகவும், தனிப்பட்ட அனுபவமாகவும் இருப்பதால், இப்புரிதல்களை, வார்த்தைகளால் விளக்கிக் கூறுவது கடினம். ஒரு ஆழ்நிலைப் பரிமாணம் பற்றிய விழிப்புணர்வே, மாணவர்களுக்கு மத்தியில் முதன்முதலாக அறியப்படுவதாகும். பொருள்சார் நிகழ்வுகளுக்கு அப்பால், அறிவாற்றலால் அணுகமுடியாத, இப்பிரபஞ்சத்தைப் பற்றிய கண்ணோட்டத்தின் ஒருவகையான சுவையை அவர்கள் பெறுகிறார்கள்.…