Browsing Category
சூஃபித் தொடர்கள்
9 posts
நக்ஷ்பந்தி
முதன்முதலாக துருக்கிஸ்தானில் வளர்ச்சி பெற்றிருந்த ‘சில்சிலா காஜகான்’ எனும் சூஃபித்தொடரிலிருந்து உருவானதுதான் ‘நக்ஷ்பந்தி’ சூஃபித்தொடராகும். இன்றைய சீனாவின் சின்ஜியான்ங் மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட காஜா அஹ்மது யஸவி என்பவர்களும் (இறப்பு கி.பி.1167), மற்றும் இன்றைய உஸ்பெகிஸ்தானின் பிரபல நகரான புகாராவைச் சேர்ந்த காஜா அப்துல் காலிக் குஜ்தவானி (இறப்பு கி.பி.1179) ஆகிய இரு மாமேதைகளும் காஜகானின்…
முஜத்திதி
நக்ஷ்பந்தி தரீக்காவின் ஆசானும், இந்தியத் துணைக்கண்டத்தின் ஆன்மீக மாமேதையுமான, ஷேக் அஹ்மது ஃபாரூகி ஸர்ஹிந்தி (இறப்பு-1624) அவர்கள் பதினாறாம் நூற்றாண்டின் இறுதிகளில், இந்திய முஸ்லிம்களிடத்திலும், சூஃபி வட்டங்களிலும் பரவிவந்த இஸ்லாத்திற்கு மாற்றமான செயல்பாடுகளைத் தடுக்கும் முயற்சியாக, ஷரீயத்தின் முக்கியத்துவத்தை, உறுதியோடு மறுநிர்மாணம் செய்தார்கள். இச்சீரிய முயற்சியின் காரணமாக அன்னார், “முஜத்திதே அல்ஃபஸானி” (இரண்டாயிரமாண்டில் இஸ்லாத்தைப் புதுப்பித்தவர்)…
சிஷ்தி
ஷேக் அபூ இஸ்ஹாக் (இறப்பு.940 அல்லது 966) என்ற ஆன்மீக அறிஞரால் சிஷ்தி சூஃபித்தொடர் நிறுவப்பட்டது. சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷேக் அபூ இஸ்ஹாக் அவர்கள், தங்களின் ஆன்மீக வழிகாட்டியின் மூலம் சிஷ்த் (Near Herat, Afghanistan) எனும் நகருக்கு ஆன்மீக போதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள். அன்னாரால் உருவாக்கப்பட்ட இச்சூஃபித்தொடரானது, பிரபல ஷேக் காஜா முயினுத்தீன் சிஷ்தி…
காதிரி
ஷேக் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் கி.பி.1077 ஈரானில் உள்ள ஜீலான் எனும் நகரில் பிறந்தார்கள். ஆன்மீகக் கல்வியைக் கற்றுக்கொள்ளும் முன்னரே, இளம் பருவத்திலேயே இஸ்லாத்தின் அனைத்துத் துறைகளையும் கற்றுத் தேர்ந்தார்கள். இறுதியாக அன்னார் பாக்தாத் நகருக்கு குடிபெயர்ந்தனர். அன்னாரின் அற்புத சொற்பொழிவுகளைச் செவிமடுக்க, அன்றைய முஸ்லிம் உலகின் தலைநகராம் பாக்தாத்தில், ஆயிரக்கணக்கில் மக்கள் திரளுவர்.…
ஷாதிலி
ஷேக் அபுல் ஹஸன் ஷாதிலி (கி.பி.1196/1197-1258) அவர்களின் பெயரிலிருந்தே ‘ஷாதிலி தரீகா’ பெயர்பெற்றுக் கொண்டது. வடக்கு மொரோக்கோவில், ஸியூட்டா எனும் நகருக்கருகில் “கிமாரா” எனும் சிற்றூரில், ஒரு விவசயத் தொழிலாளிக் குடும்பத்தில் அன்னார் பிறந்தார்கள். அன்னார் இஸ்லாமியச் சட்டவியலை (ஃபிக்ஹ்) ஃபெஸ் (Fez) எனும் நகரில் சிறந்து விளங்கும் கராவிய்யின் பல்கலைக்கழகத்தில் பயின்றார்கள். தொடர்ந்து அன்னார் பல நாடுகளுக்கும்…
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)
ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மிகப் பெரும் ஞானியாகவும், உண்மையான ‘இன்ஸானே காமில்’ எனப்படும் பரிபூரண மனிதப் புனிதராகவும் இருந்தார்கள். சூஃபித்துவ சிந்தனை மற்றும் நடவடிக்கைகளுக்கு அன்னார் வழங்கிய பங்களிப்பும், முக்கியத்துவமும், அகிலமெங்கும் அதிகமதிகம் அங்கீகரிக்கத் தக்கதாக இருக்கின்றது. இந்தியாவின் வங்காள மாகாணத்தில், பால்காடி எனும் கிராமத்தில் கி.பி.1859 ல் ஹஜ்ரத்…
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்)
ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், கி.பி. 1870 க்கும் 1871 க்குமிடையில், உ.பி.மாநிலத்தில், ஆஜம்கார் எனும் ஊரில் பிறந்தார்கள். அவர்களின் தந்தையார் மியான் கரீம் பக்ஷ் என்பவர்கள், சிஷ்தி ஷெய்கு மவ்லானா நிஜாபத் அலி ஷாஹ் (ரஹ்) அவர்களின் சீடராவார்கள். ஹஜ்ரத்தின் தாயார், மிகுந்த ஆன்மீக ஈடுபாடு உடையவர்களாகவும், அதே ஷெய்குடைய சீடராகவும் திகழ்ந்தார்கள்.…
ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)
ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், உதய்ப்பூருக்கு அருகில் காங்குருலி எனும் நகரில் கி.பி.1920 ஆம் ஆண்டு பிறந்தார்கள். சிறு வயதிலிருந்தே ஆன்மீக ஈடுபாடுகளில் வலுவான ஆர்வமுடையவர்களாகக் காணப்பட்டார்கள். அன்னாரின் வளரும் மனம், விரைவிலேயே, எளிதில் புரியவைக்க இயலாத கேள்விகளால் சூழ்ந்து கொண்டது. “மனித உடல் மற்றும் மன ரீதியான அனுபவங்களுக்கப்பால்,…
எமது ஞான குருமார்களின் பரம்பரை
ஓர் ஆசிரிய-மாணவர் உறவு மூலம் சூஃபி போதனைகள் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆசிரிய-மாணவத் தொடர்பும், ஒரு சங்கிலியின் இணைப்பாக உருவாகி, பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள் வரைச் சென்றடையக்கூடிய, உறுதியான, நம்பகமான சூஃபித் தொடருடன் பொருத்தப்படுகிறது. இந்த “துவக்கச் சங்கிலி” அல்லது சில்சிலா என்பதே ஷஜ்ரயே தய்யிபா (ஞான குருப் பரம்பரை) என்றழைக்கப்படுகிறது. சூஃபி போதனைப் பள்ளியின்…