Browsing Category
சூஃபித்துவம்
3 posts
சூஃபித்துவம்
இறைஞானம் பெற வேண்டுமென்ற துடிப்பும், பௌதீக உலகத்துக்கப்பால் , வேறொரு பரிமாணத்தின் அனுபவம் பெற்றிட விழையும் உள்ளுணர்வும், ஆன்மீகப் பேருண்மையை அறிந்து, அதன்பால் மீளவேண்டுமென்ற உந்துதலும், சமயங்களைக் கடந்து, ஒவ்வொரு நபரிடத்திலும் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. இயல்பாகவே, ஒவ்வொரு தனிமனிதனும், வெவ்வேறுபட்ட அளவுகளில், மேற்குறிப்பிட்ட மனோபாவத்தின் தாக்கத்திற்கு உள்ளாக்கப் பட்டிருக்கின்றான். சிலருக்கு குறிப்பிடத்தக்க அளவாகவும், சிலருக்கு மிகக்குறைந்த…
தோற்றம்
கீழ்த்திசை மொழிப் புலமையாளர்கள் (Orientalists), சூஃபித்துவத்தின் தோற்றம் குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கின்றனர். சில ஆசிரியர்கள், அதில் கிரேக்க தத்துவத்தின் தாக்கம் மேலோங்கியுள்ளது என வாதிடுகின்றனர். உத்தேசமான இக்கருத்துக்கு ஆதரவாக, கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் R.A. நிக்கல்சன் (Professor R.A. Nicholson), சூஃபிகளின் படைப்புகளுக்கும், கிரேக்கத் தத்துவங்களுக்கும் இடையேயான ஒற்றுமைகளை மேற்கோள் காட்டுகிறார். சில ஆசிரியர்களோ, அது…
வரலாற்று ரீதியான வளர்ச்சி
சூஃபித்துவம் என்பது இஸ்லாமிய ஆன்மீகப் பரிமாணத்துடன் எப்போதும் தொடர்புடையதாக இருந்த போதிலும், ‘சூஃபித்துவம்’ என்ற சொல், இஸ்லாம் தோன்றியதிலிருந்து பல்லாண்டுகள் வரையிலும் பயன்பாட்டில் இல்லாததாகவே தெரிகிறது. அவ்வாறெனில், சூஃபித்துவத்தின் வரலாறுதான் என்ன?, அது எங்கிருந்து தோன்றிற்று? எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும், ஒரு சில நபர்களிடத்தில் இருந்த ஆழ்ந்த ஆவலும், உள்ரங்க அமைதியின்மையும், அவர்களைத் தனித்திருந்து…