
ஸவானிஹ் ஹயாத்
ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் (ரஹ்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
(உருது)
ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)
வெளியீடு: சத்திய வேட்கை மையம்
நூல் விரிவுரை
நூலாசிரியரின் ஆன்மீக ஆசான், ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் அவர்களின் சுய சரிதை மட்டுமின்றி இன்னும் அதிகப்படியான விளக்கங்களை உள்ளடக்கியதாக இந்நூல் மிளிர்கிறது. தான் சத்தியத்தைத் தேடிச்சென்ற பாதையில் வாசகரையும் கொண்டு சென்று, எவ்வாறு அந்த சத்திய வேட்கையின் தாகம், தன்னுடைய ஆன்மீக ஆசான் மூலம் தணிந்தது என்பதை வாசகருக்குத் தெளிவாக விளக்குகிறார் இந்நூலாசிரியர். ஹஜ்ரத் மௌலவி ஸயீத் அஹ்மத் கான் அவர்களின் ஆன்மீகக் கற்பித்தல் முறைகளையும், உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் அன்னாரின் போதனை முறைகள் சென்றடைந்த நிகழ்வுகளையும் இந்நூல் விவரிக்கிறது.