உள்ளத்தில் புதைந்து கிடக்கும் ஆற்றல்கள் மற்றும் அகமிய நுட்பங்களின் அற்புத செயல் திறன்களை விழிப்புறச் செய்து, அவற்றை வாழ்வியல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் சிறப்பானதொரு வழிமுறையான ‘முராகபா’ எனும் தியானப் பயிற்சி இந்நிறுவனத்தின் சிறப்பம்சமாகும். அந்த முரகாபாவின் வாயிலாக ‘அகமிய உள்ளுணர்வு’ அல்லது ‘ஞானப் பார்வை’ உண்டாகிறது. அதன் வெளிச்சத்தில் அனைத்துப் பொருட்களும், அதன் உண்மையான வடிவத்தில் நம் முன் தோற்றம் அளிக்கின்றது. பிரபஞ்சமும் வாழ்க்கையின் உண்மை நிலையும், சீரான முறையோடு புரிந்து விடுகிறது. அந்த அகமிய உள்ளுணர்வுப் பார்வையுடன், ஒரு புதிய சிந்தனையின் கண்ணோட்டம் ஏற்பட்டு விடுகின்றது. அது வாழ்க்கையை நேரான வழியில் கொண்டு சென்று ஒரு ஆரோக்கியமான குறிக்கோளை நல்குகிறது. செயல் முறையிலே தூய்மையை ஏற்படுத்தி, வாழ்வின் கோணலான பாதையையும், வழிகேட்டையும் விட்டு தூர விலக்கி வைக்கிறது. எல்லாவற்றையும் விட மிகப்பெரிய அனுகூலம் என்னவெனில், அது நம்முடைய உயர்குணத்தையும், தனிமனிதப் பண்பையும் நிலைக்கச் செய்து வாழ்வை மேம்படுத்த உதவுகிறது.
யாரெல்லாம் செயல்முறையின் அடிப்படையிலான அணுகுமுறையையும், விசாரித்தரிதலையும் மதிப்புடன் நோக்குகிறார்களோ, உண்மையான அறிவைப் பெற்றுக்கொள்ள ஆவல் கொள்கிறார்களோ, வாழ்வின் யதார்த்தத்தையும், உண்மையையும் புரிந்து கொள்ள விரும்புகிறார்களோ, அவர்களை நம் பயிற்சி உத்திகளை முயன்று பார்க்க அழைக்கின்றோம். தனி நபரொருவர் பின்பற்றி ஒழுகும் ஏதேனுமொரு தத்துவார்த்தக் கொள்கையோ அல்லது சமயக் கோட்பாடோ இந்தச் செயல்முறையில் முக்கியமன்று. நமது செயல்பாடுகளில் ஆர்வமுள்ள எந்த நபரும், குறைந்த பட்சம் ஒரு வாரமாகிலும் நம்முடைய நிறுவனத்தில் தங்கி, நமது பயிற்சி உத்திகளை அவதானித்தும், பரிசோதித்தும் பார்க்கும்படி நாம் அறிவுறுத்துகிறோம். நெருக்கமான கவனிப்பு மற்றும் நடைமுறை அனுபவத்தை நேரில் பெற்ற பிறகே, நமது செயல்பாடுகளின் உண்மை மதிப்பை அளவிட்டுப் பார்க்கும் நிலைக்கு அந்த நபர் வரமுடியும். இருப்பினும், இந்தியாவின் தலைநகர் தில்லிக்கு இச் சந்தர்ப்பத்தில் பயணம் மேற்கொண்டு, நம் பள்ளியில் தங்கிச்செல்ல வாய்ப்பில்லாதவர்கள், மின்னஞ்சல் மற்றும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு பயிற்சி முறைகளைத் தெரிந்துகொள்ளலாம். நாம் அவர்களின் வழிகாட்டலுக்கான அறிவுரைகளையும் போதனைகளையும் அனுப்பித் தருவோம்.
தத்துவார்த்தப் பிரச்னைகளுக்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் பகுத்தறிவு ரீதியான விளக்கங்களை முன்வைப்பது இப்பள்ளியின் நோக்கமன்று. இது சாதாரணமாக, முற்றிலும் அனுபவங்களும், உண்மையான பயிற்சிகளையும் உள்ளடக்கிய ஒரு பாதையை மேம்படுத்திச் செல்ல நாடுகிறது.