School of Sufi Teaching

சிஷ்தி

ஷேக் அபூ இஸ்ஹாக் (இறப்பு.940 அல்லது 966) என்ற ஆன்மீக அறிஞரால் சிஷ்தி சூஃபித்தொடர் நிறுவப்பட்டது. சிரியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஷேக் அபூ இஸ்ஹாக் அவர்கள், தங்களின் ஆன்மீக வழிகாட்டியின் மூலம் சிஷ்த் (Near Herat, Afghanistan) எனும் நகருக்கு ஆன்மீக போதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

அன்னாரால் உருவாக்கப்பட்ட இச்சூஃபித்தொடரானது, பிரபல ஷேக் காஜா முயினுத்தீன் சிஷ்தி (இறப்பு 1236) அவர்களால் பின்னர் செம்மைப் படுத்தப்பட்டு பிரசித்தி பெற்றுத் திகழ்ந்தது. மத்திய ஆசியா, ஈராக், அரேபியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில், கற்றலிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டிருந்த அன்னாரின் பூர்வீகதேசம் ஈரானாகும்.

பெருந்தன்மைக்கும், அரவணைப்புக்கும், இரக்க குணத்திற்கும் பெயர்பெற்ற காஜா முயினுத்தீன் சிஷ்தி அவர்கள் அன்பையும் சமாதானத்தையும் அகிலமெங்கும் பரப்பினார்கள். அர்ப்பணிப்புடன் அன்னார் ஆற்றிவந்த சேவையின் காரணமாக,”ஏழைகள் மீது இரக்கம் காட்டும் ஏந்தல்” எனும் பட்டத்தைப் பெற்றுச் சிறப்புற்றார்கள். அவர்களின் பிந்தைய காலத்தின் பெரும்பகுதி, இந்தியாவின் அஜ்மீர் நகரிலேயே கழிந்தது. எனவே, இன்றளவும் அந்நகரே சிஷ்தியாவின் போதனைகளை வழங்கும் மாபெரும் மையமாகத் திகழ்கிறது.

Total
0
Shares
முந்தையது

முஜத்திதி

அடுத்தது

காதிரி

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

எமது ஞான குருமார்களின் பரம்பரை

ஓர் ஆசிரிய-மாணவர் உறவு மூலம் சூஃபி போதனைகள் தொடங்குகிறது. ஒவ்வொரு ஆசிரிய-மாணவத் தொடர்பும், ஒரு சங்கிலியின் இணைப்பாக உருவாகி, பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்கள்…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்)

ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், உதய்ப்பூருக்கு அருகில் காங்குருலி எனும் நகரில் கி.பி.1920 ஆம் ஆண்டு பிறந்தார்கள். சிறு…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்)

ஹஜ்ரத் ஹாமித் ஹஸன் (ரஹ்) அவர்கள், கி.பி. 1870 க்கும் 1871 க்குமிடையில், உ.பி.மாநிலத்தில், ஆஜம்கார் எனும் ஊரில் பிறந்தார்கள். அவர்களின் தந்தையார் மியான்…
மேலும் வாசிக்க

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்)

ஹஜ்ரத் ஸய்யித் அப்துல் பாரி ஷாஹ் (ரஹ்) அவர்கள், மிகப் பெரும் ஞானியாகவும், உண்மையான ‘இன்ஸானே காமில்’ எனப்படும் பரிபூரண மனிதப் புனிதராகவும் இருந்தார்கள்.…