நமது பள்ளியின் கொள்கை மற்றும் கோட்பாடு “எல்லோரிடத்திலும் சமாதானம்” எனும் கோட்பாட்டுடன் ஒத்ததாக இருக்கிறது. எந்த மதத்துடனும், நம்பிக்கையுடனும் முரண்பாடு என்பது நமது கொள்கையிலிருந்தும் நோக்கங்களிலிருந்தும் முற்றிலுமாக நீக்கப்படுகிறது, ஆனால், அந்த நோக்கங்களை அமுல்படுத்த, நமது பள்ளி சில குறிப்பிட்ட நடைமுறைப் பயிற்சித் திட்டங்களைப் பின்பற்றி நடக்க சிபாரிசு செய்கிறது என்பது வெளிப்படையானதே. இந்தப் பயிற்சித் திட்டங்கள் ஏனைய அமைப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடன் முரண்பாடு இல்லாது இருப்பினும், அது தனக்கே உரித்தான பாணியைப் பின்பற்றி, இந்தப் பாதையில் பயணம் செய்து இலக்கை அடைந்தவர்கள் மற்றும் நமக்கு வழிகாட்டியவர்களிடத்திலிருந்து கற்றுக்கொண்ட சில சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
