School of Sufi Teaching

இங்கிலாந்தில் இருக்கும் இஸ்லாமிய மாணவரின்

“ஏற்கனவே நீங்கள் அறிந்த சுருக்கத்தின் விரிவாக்கம் இது”
சமயப் பிண்ணனி கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த நான், பிறப்பிலேயே முஸ்லிமாக இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ஒரு சூஃபி ஆர்வலராக, நமது சூஃபி போதனைப் பள்ளியின், லண்டன் குழுவில் சேர்ந்தேன். இந்த சூஃபி பாதையில் நமக்கு வழங்கப்படும் பயிற்சிகள் யாவும், நமது அந்தரங்க உள்ளமை, மற்றும் ஆன்மாவின் குணாதிசயங்களை அடையாளம் காண உதவுகிறது. ஆன்மீகப் பயணத்தின் பணி என்னவெனில், ஒரு வரையறைக்கபட்ட சுய உணர்தலில் இருந்து, உண்மையான இயல்பான உணர்தலுக்கு நம் அடையாளத்தை மாற்றிக் கொள்ள கற்றுத் தருகிறது. ஒரு சூஃபி மாணவனாக, அல்லாஹ்வின் நெருக்கம் பற்றிய அதிக விழிப்புணர்வு பெற்றவனாக இருந்தேன். ஹஜ்ரத் ஷேக் அவர்களைச் சந்திக்கும் முன்னர் என் இதயமானது, இன்னும் அழகு, நிறம் மற்றும் மணம் ஆகியவைகளைப் பெற்ற முழு மலராகாமல், வெறும் மொட்டாகவே இருந்தது. தியானம் என் மனதைத் தெளிய வைத்தது. அதன் விளைவாக, என்னை நான் அறியவும், இவ்வுலகத்துக்கு நான் வந்த நோக்கத்தைப் புரியவும், இப்பிரபஞ்சத்தில் அமைந்திருக்கும் அனைத்து அம்சங்களையும், சரியான கண்ணோட்டத்தில் பார்க்கவும் தொடங்கினேன். சூஃபித்துவத்தின் தெளிவான புரிதலில், நான் இவ்வுலகத்தில் இருந்தேனே தவிர, உலகத்துக்காக இல்லை.
2006 ஆகஸ்ட் மாதம், ஹஜ்ரத் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்கள் லண்டனுக்கு வருகை புரிந்தார்கள். நான் ஹஜ்ரத் அவர்களைச் சந்தித்தபோது, பனிவன்புடன் கூடிய புன்முறுவலுடன், மென்மையான குரலில் என்னை வரவேற்றார்கள். அன்னாரை நற்பண்பு மிக்க, இளகிய மனம் படைத்த, பழகுவதற்கு எளிமையான பண்புகளைப் பெற்றவர்களாகக் கண்டேன். என்னிடம் வர்ணிக்க வார்த்தைகளில்லை. மரத்தடியின் கீழ் நிற்கும் ஒருவனால் மட்டுமே, இதமான நிழலின் அருமையை அனுபவிக்க முடியும். அதைப்போன்றே, ஹஜ்ரத் அவர்களின் அருகாமையின் நிழல், எனக்கு அற்புதமான அமைதியையும், சௌகரியத்தையும் வழங்கியது. ஹஜ்ரத் அவர்களின் மாணவரானதிலிருந்து, ஒரு சிறந்ததை நோக்கி, என்னிடம் அதிக மாற்றங்கள் தென்பட்டன. என் வாழ்விலும், என் சிந்தனைகளிலும் உண்மையைப் பற்றிய புதிய பார்வை ஊடுருவியது. நான் இப்போது அதிக முனைப்புடன் இருக்கும் ஆளானேன். என் சமய நம்பிக்கையின் மீது அதிக நேசம் பிறந்தது. சூஃபி ஆசான்களைப் பற்றியும், அழகிய மார்க்கமான என் இஸ்லாத்தையும் பற்றி மென்மேலும் அறிய வேண்டுமென்ற ஆவலும் துடிப்பும் எனக்கு ஏற்பட்டது.
நம்முடைய ஆன்மீக நெறியில், நம்முடைய ஆன்மீக வழிகாட்டி மூலம் அனு தினமும் செய்வதற்காக தியானப் பயிற்சிகள் நமக்குத் தரப்படுகின்றன. அவைகள் வரிசைக் கிரமமாக, காலையும் மாலையும் மீண்டும் மீண்டும் செய்து வரும் வகையில் வழங்கப்படுகின்றன.
அவ்வகையான பயிற்சிகள், நமது அந்தரங்க உள்ளமையையும், ஆன்மாவின் குணாதிசயங்களையும் நமக்கு அடையாளம் காட்ட உதவுகின்றன. ஆன்மீகப் பயணத்தின் பணி என்னவெனில், ஒரு வரையறைக்கபட்ட சுய உணர்தலில் இருந்து, உண்மையான இயல்பான உணர்தலுக்கு நம் அடையாளத்தை மாற்றிக் கொள்ள கற்றுத் தருகிறது. இப்பாதையில் முன்னேறிக் கொண்டிருந்த நான், இதுவரை உணர்ந்திராத பல விஷயங்களை உணரத் தொடங்கினேன்; ஈமானின் இனிமையை சுவைக்கத் தொடங்கினேன். தியானம் என் இதயத்தை ஒளிமயமாக்கி என் ஈமானை வலுவாக்கியது. அன்றாட வாழ்வியலில் இதயத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனக் கற்றுக் கொண்டேன். அதற்கு மூளை எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் சரியே. இதயம் என்பது ஒரு உணர்வு மையமான உருப்பு மட்டுமல்ல, அது மனசாட்சியுடன் செயல்படும் ஒரு அங்கமாகும். (நன்மை தீமையை வேறுபடுத்திக் காட்டுவதாகும்.)

எல்லாம் வல்ல இறைவன், ஹஜ்ரத் ஷேக் ஆசாத் ரசூல் (ரஹ்) அவர்களுக்கும் அன்னாரின் மாணாக்கர்களுக்கும் அருள் புரிவானாக!

Total
0
Shares
முந்தையது

இங்கிலாந்தில் வசிக்கும் இளம் மாணவரின் சொந்த அனுபவம்

அடுத்தது

ஓர் ஆங்கில மாணவி, தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்ததைப் பற்றி விவரிக்கிறார்

தொடர்புடைய இடுகைகள்
மேலும் வாசிக்க

ஓர் ஆங்கில மாணவி, தான் சூஃபித்துவப் பாதைக்கு வந்ததைப் பற்றி விவரிக்கிறார்

நான் வளர்ந்து வரும் கால கட்டத்தில், என்னைக் காட்டிலும் அபார ஆற்றலுடைய ஏதோ ஒன்று இருந்து கொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு எனக்கு ஏற்பட்டது. அது…
மேலும் வாசிக்க

இங்கிலாந்தில் வசிக்கும் இளம் மாணவரின் சொந்த அனுபவம்

யோகாவைப் பயிற்சி செய்து வந்த எனது பல்கலைக்கழகத்து நெருங்கிய நண்பர் மூலம், தியானத்துடனான முதல் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. உண்மையிலேயே, தியானம் என் மன…
மேலும் வாசிக்க

இங்கிலாந்து மாணவரின் சொந்த அனுபவம்

நான் இளம் குழந்தையாக இருந்த போதே எனக்கு இயற்கையின் மீது இனம் புரியாத காதல் இருந்து வந்தது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளின் பசுமையான…
மேலும் வாசிக்க

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாணவரின் சான்றுரை

எனது ஆன்மீக வழிகாட்டியாக ஆகப் போகும், சூஃபி ஷேக் அவர்களை முதன்முறையாகச் சந்தித்த போது, நான் ஏறிப்பயணமாகும் இப்பாதை ஒரு புதிய வழியாகவும், புதிய…