பள்ளியின் நோக்கம் பற்றி சுருக்கமாக பின்வருமாறு கூறமுடியும்: விஞ்ஞானம் மற்றும் யதார்த்த உண்மைகளின் மூலம் இதுவரை ஆராயப்படாத, மனித இயல்பின் அப்படிப்பட்ட பகுதிகளையும் மற்றும் மனித அறிவின் மறைக்கப்பட்ட மூல ஆதாரங்களையும், தீர்க்கமாக ஆய்வு செய்வதே இப்பள்ளியின் நோக்கமாகும். இந்த ஆராய்ச்சியானது நவீன மற்றும் தெளிவான அறிவியல் அணுகுமுறையையும், பரிசோதனை முறைகளையும் பின்பற்றியதாக இருத்தல் வேண்டும். இந்த விதத்தில், மனிதனின் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வையும் மற்றும் மனித குலத்தின் வேறுபட்ட சீர்கேடுகளுக்கான பரிகாரத்தையும் காணலாம்.. மனிதர்களின் அடிப்படை இயல்பு, இப் பிரபஞ்சம் மற்றும் மனிதகுலத்துக்கும் இவைகளுக்கும் இடையேயான உறவுகளை சம காலத்துக்குப் பொருத்தமான வழிகளில் புரிந்து கொள்ள இப்பள்ளி பாடுபடுகிறது.
இந்தப் புரிதல் உணர்வு, தனிநபர் மற்றும் கூட்டு மனித வாழ்வின் சிக்கல்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க நமக்கு உதவும். பொருள்களின் ஆற்றல் மற்றும் கண்டுபிடிப்புகள் யாவும் மனித குலத்துக்குச் சேவை புரிவதில் பயன்படுத்தப்படும் அதே சமயம், மனிதனின் உள்ரங்கத்தில் புதைந்து கிடக்கும் அபார ஆற்றல்களும், திறன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவை முழு மனித சமுதாயத்தின் நலனுக்கும் பயன்படச் செய்வதே இப்பள்ளியின் பிரதான நோக்கமாகும்.
மனிதனின் சுயத்திற்குள் ஒளிந்து கிடக்கும் எந்த சக்தியைத் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்த விழைகிறோமோ, அந்த சக்திதான் அன்பு. அந்த அன்பெனும் சக்திதான், மனித குலத்தை குறுகிய பொருள்சார் மனப்பான்மை மற்றும் சுயநலம் போன்ற பிணைப்புகளிலிருந்து விடுவித்து, சகிப்புத் தன்மையை மேற்கொள்ளுதல், அனுதாபம் காட்டுதல், பரோபகார உணர்வுடன் நடத்தல் மற்றும் பிறருக்காக தன்னையே தியாகம் செய்தல் போன்ற உயர்குணப்பண்புகளுக்கு இணங்க வைக்கிறது. நம்முடன் பின்னிப் பிணைந்திருக்கும் சுயம் மற்றும் அதில் மறைந்து கிடக்கும் அற்புத ஆற்றல்களைப் பற்றிய புரிந்துணர்வானது, மற்றவர்களிடத்திலும் மேலும் முழுப் பிரபஞ்சத்திடமும் நாம் நடந்துகொள்ள வேண்டிய அணுகுமுறையையும், நடத்தையையும் சரிசெய்து, அதற்கு உகந்ததாக மாற்றி அமைக்கும். மனிதனுக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையேயான ஆற்றல் வாய்ந்த தொடர்புகளை அது வெளிப்படுத்தி, எல்லையற்ற அன்பையும், உலகளாவிய சகோதரத்துவத்தை உள்ளடக்கிய விசுவாசப் பிரமாணத்தையும் உருவாக்கித்தரும்.